பிக் பாஸில் ஜெயிக்க பித்தலாட்டம் செய்யும் தாமரை! திண்டுக்கல்லில் இருந்து வந்த போட்டோ
பிக் பாஸ் ஷோ தமிழ்நாட்டில் எவ்ளோ பாப்புலர் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பெரிய ஹிட் ஆன இந்த ஷோவின் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தாமரை.
நாடக நடிகை, ஆங்கிலம் தெரியாது, பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் விளையாடுவது கஷ்டம் என பல தடைகளை தாண்டி 5ம் சீசனில் அவர் கடைசி வரை வந்தார். ஆனால் கடைசிக்கு முந்தைய வாரத்தில் அவர் எலிமினேட் ஆனார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்ட்மேட் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார். இந்த வாரத்தோடு ஷோ முடியவுள்ள நிலையில் டைட்டில் யார் ஜெயிப்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் தாமரை செல்விக்கு வாக்களியுங்கள் என திண்டுக்கல்லில் இருக்கும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறதாம். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகிறது.
பிக் பாஸ் ஜெயிக்க வாக்குகளை அதிகம் பெற இப்படி எல்லாமா பித்தலாட்டம் செய்வது என பலரும் இதை கிண்டல் செய்து வருகின்றனர்.
