அனிருத் பாட்டை கேட்டு வளர்ந்தியா? பிக் பாஸ் தர்ஷனை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த அவர் மாடலிங் செய்து வந்த நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் செய்திருந்த நிலையில் தான் அவர் மூலமாக பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு சனம் ஷெட்டியை தர்ஷன் திருமணம் செய்ய முடியாது என சொன்னதால் அவர் போலீசில் புகார் கொடுத்தது எல்லாம் வேறு கதை.
அதன் பின் தர்ஷன் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் கேஎஸ் .ரவிக்குமார் உடன் இணைந்து நடித்து இருப்பார். அடுத்து அவர் இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தர்ஷனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அவர் சின்ன வயதில் இருந்தே அனிருத் இசையை கேட்டு வளர்ந்தேன் என சொன்னதை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Epdi? Chinna vayasulandhu Anirudh paata kettu valanthiya? ??? pic.twitter.com/jkFWqGL1BK
— Sandeep (@Sandeep_5_7_4) August 31, 2022