3 வருட திருமண வாழ்க்கை... வனிதாவை தொடர்ந்து புருஷனை விவாகரத்து செய்த பிக்பாஸ் பிரபலம்

Bigg Boss
By Edward Aug 15, 2022 11:13 PM GMT
Report

பிக்பாஸ் 2 சீசன் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி பிரசாத். குறுகிய காலத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு சில சர்ச்சையான செயலிலும் சிக்கினார்.

3 வருட திருமண வாழ்க்கை... வனிதாவை தொடர்ந்து புருஷனை விவாகரத்து செய்த பிக்பாஸ் பிரபலம் | Bigg Boss Vaishnavi Announced Her Divorce News

நிகழ்ச்சிக்கு பின் தான் காதலித்து வந்த அஞ்சான் என்பவரை 2019ல் திருமணம் செய்து கொண்டார். சாதாரணமாக நடைபெற்ற திருமண வாழ்க்கையில் சரிபட்டு வராது என்று விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதை அறிவித்துள்ளார் வைஷ்ணவி.

6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த நானும் அஞ்சானும் பிரிய திட்டமிட்டுள்ளோம். ஆலோசனை செய்து இனிமேல் நாங்கள் நண்பர்களாக இருப்போம். எங்களுக்கு எந்த மோசமான செயல்களும் நடக்கவில்லை. எங்கள் பிரிவிற்காக வருந்தவேண்டாம். நாங்களும் பிரிந்ததற்கு வருத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் வைஷ்ணவி.