திரும்பி வந்துராத, தனியா இருந்துரு!! ரச்சிதா பிரியவை பற்றி பேசிய பிக்பாஸ் நடிகை விசித்ரா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டு போட்டியாளர்களுக்கு கடுமையான டாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாக்ஸ் நடந்ததை அடுத்து விஷ்ணு அதிக புள்ளிகளை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையில் போட்டியாளர்களிடையே சண்டை நடந்தும் வருகிறது. அப்படி பல நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் இடையே ஒருவரை ஒருவரை குறை சொல்லி வாக்குவாதம் நடத்துவார்கள்.
நேற்றைய எபிசோட்டில் தினேஷ் செய்த செயலால் கடுப்பாகிய விசித்ரா, கேமரா முன் நின்று கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. இவர்கள் இருந்து என்ன பிரயோஜனம், இங்கே இவருடன் ஹவுஸ் மேட் ஆகவே இருக்க முடியல, இவர்கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான்.
திரும்பி கிரிம்பி வந்துடாதமா, தாயே. ஒன்னு வாழ்க்கையை நடத்து, தனியா வாழ்ந்திடலாம் இவங்க கூட எப்படி குடுத்தனம் பண்ணுவாங்க என்று பல வார்த்தைகளை கூறி புலம்பி தள்ளியிருக்கிறார் விசித்ரா.
இதை ரச்சிதாவை மனதில் வைத்து தான் விசித்ரா பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலர் கண்டபடி விசித்ராவை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#Vichitra ma to #Dinesh wife #Rachitha
— BB Mama (@SriniMama1) December 29, 2023
"Thirumpi kirumpi vanthuratha ma thayae olunga vaalkaiya nadathu" 🥲🥲💔
It was unnecessary for you vichuma.
It is a game, you need to stay within the rules 🙏#BiggBossTamil7#BiggBoss7Tamil
pic.twitter.com/rZfoK0IaA8