பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை பார்த்துள்ளீர்களா! பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க
Bigg Boss
Bigg Boss Tamil 8
MuthuKumaran Jegatheesan
By Kathick
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 106 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. முத்துக்குமரன் மக்களால் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் டாப் 5ல் முத்துக்குமரனுடன் இணைந்து சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் இடம்பிடித்தனர். பைனல் நடந்து முடிந்தபின், பிக் பாஸ் வீட்டிற்குள் பார்ட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளர்களுடன் பிக் பாஸ் குழுவினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களை தனது குரலால் கவர்ந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோவும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
பிக் பாஸ் ஆக இருந்து இதுவரை அனைத்து போட்டியாளர்களை வழிநடத்திய இவர், அந்த பார்ட்டியில் ரசிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..