இளைஞரிடம் ரூ. 5 லட்சம் பணப்பறிப்பு!! பிக்பாஸ் 8 பிரபலம் வர்ஷினி கைது..

Tamil Actress Bigg Boss Tamil 8 Arrest
By Jai Sep 23, 2026 06:15 AM GMT
Report

வர்ஷினி வெங்கட்

மாடல் அழகியாக திகழ்ந்த வர்ஷினி வெங்கட், சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து பிரபலமானார். அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்தார். வீட்டிற்குள் சில நாட்கள் மட்டுமே இருந்த வர்ஷினி, எவிக்ட்டாகி வெளியேறினார்.

இளைஞரிடம் ரூ. 5 லட்சம் பணப்பறிப்பு!! பிக்பாஸ் 8 பிரபலம் வர்ஷினி கைது.. | Bigg Boss8 Fame Varshini Venkat Arrested

அதன்பின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்தார். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் கிளாமர் போட்டோஷூட்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்த வர்ஷினி, விஜய்யின் தவெக உறுப்பினரானார்.

கைது

இந்நிலையில், சென்னை கிண்டியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வர்ஷினி மீது புகாரளித்துள்ளார். குறும்படம் எடுக்க வேண்டும் முதலீடு செய்யுங்கள் என்று வர்ஷினி தன்னை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பெற்றதாகவும், ரூ. 27 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அந்த புகாரில் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞரிடம் ரூ. 5 லட்சம் பணப்பறிப்பு!! பிக்பாஸ் 8 பிரபலம் வர்ஷினி கைது.. | Bigg Boss8 Fame Varshini Venkat Arrested

இதனையடுத்து கிண்டி போலிசார் வர்ஷினி வெங்கட் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக வர்ஷினி, சஞ்சய் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.