எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!! திவாகருக்கு சேரன் கொடுத்த பதிலடி...UNCUT

Cheran Gossip Today Tamil TV Shows Watermelon star diwakar
By Jai Nov 24, 2026 07:00 AM GMT
Report

திவாகர்

வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னை தானே புகழ்ந்து பட்டம் அளித்து கொண்டவர் தான் திவாகர். கோமாளித்தனத்தை ரீல்ஸாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து பிரபலமான திவாகர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

பெரிய நடிகர்களை தனக்கு ஈடாக வைத்து பேசி வரும் திவாகர், இயக்குநர் சேரன் தொகுத்து வழங்கி வரும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிவாஜியோடு தன்னை ஒப்பிட்டு நடித்தும் பேசியும் பலரது வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார்.

எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!! திவாகருக்கு சேரன் கொடுத்த பதிலடி...UNCUT | Cheran Advses To Watermelon Star Diwakar Uncut Ver

சேரன் கொடுத்த பதிலடி

இதனை பார்த்த சேரன், உங்களை பார்த்து பலரும் கிண்டல் செய்கிறார்கள். அந்த அளவிற்கு அதிகமாக பேசுவதாக சொல்கிறீர்கள், யாருடன் நம்மை ஒப்பிட்டு பேச வேண்டும் என்ற வரம்பு இருக்கிறது. நீங்கள் எடுத்த எடுப்பிலேயே சிவாஜியுடன் உங்களை ஒப்பிடுகிறீரக்ள் என்று அட்வைஸ் செய்தார். அப்போது அமைதியாக இருந்த வாட்டர் மெலன் திவாகர், சில நாட்கள் கழித்து, சேரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார். அவருக்கு எதிராக தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

அன்-கட் வெர்ஷன்

இந்நிலையில், சேரன் நிகழ்ச்சியில் அன்று என்ன நடந்தது என்பதை தொலைக்காட்சி நிறுவனம் அன்-கட் வெர்ஷன் வீடியோவை பகிர்ந்துள்ளது. இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார் என்று சேரன் விமர்சித்தபடி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், திவாகரை கடுமையாக எச்சரித்தும் கண்டித்தும் வருகிறார்கள்.