பணமோசடி புகார்!! தயாரிப்பாளருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பதிலடி பதிவு...

Gossip Today Tamil Actors Bigg Boss Tamil
By Jai Nov 24, 2026 11:00 AM GMT
Report

பிக்பாஸ் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் மீது, சில மாதங்களுக்கு முன், தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் பண மோசடி புகாரை வைத்திருந்த நிலையில் இதுகுறித்து பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பணமோசடி புகார்!! தயாரிப்பாளருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பதிலடி பதிவு... | Mugen Rao Statement Dispute With Popular Producer

முகேன் ராவ்

மலேசிய வாழ் தமிழராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் முகேன் ராவ். ஒரு படம் தொடர்பாக தயாரியாளர் மலேசியா பாண்டியன் என்பவர் முகேன் பணமோசடி செய்ததாக புகாரளித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து முகேன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில், அனைத்து ஊடக நண்பர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு, சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் என்மீது காட்டிய அக்கறை, அனுப்பிய மெசேஜ்கள், தொலைபேசி அழைப்புகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பணமோசடி புகார்!! தயாரிப்பாளருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பதிலடி பதிவு... | Mugen Rao Statement Dispute With Popular Producer

ஒரு படத்தின் புராஜெக்ட்டுக்காக நான் அட்வான்ஸ் தொகை பெற்றிருந்தேன், ஆனால் அந்த புராஜெக்ட் தொடர்பான ஒப்பந்தத்தை காப்பாற்றும் வகையில், 8 முதல் 10 மாதங்கள், கிட்டத்தட்ட ஓராண்டு வரை காத்திருந்தேன். இதற்கிடையில் வேறு இரு படங்களில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புகளையும் இழந்தேன். இறுதியாக, தயாரிப்பாளர் அப்படத்தை தயாரிக்காமல் விலக முடிவெடுத்தார்.

இருந்தாலும், நான் அட்வான்ஸாக வாங்கிய முழு தொகையையும் திருப்பி அளிக்க முன்வந்து, அதை திருப்பிச் செலுத்தினேன். இவ்விவகாரத்தில் என்னுடைய பங்கையும் பொறுப்பையும் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். இந்த விஷயத்தை தொழில்முறையாக கையாள வேண்டும் என்று இதுவரை நான் அமைதி காத்து வந்தேன்.

இனி உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் இந்த விவகாரத்தை தொடர முடிவெடுத்துள்ளேன். இந்நேரத்தில், பொதுவெளியில் விவாதங்களில் ஈடுபடவோ, இது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிடவோ நான் விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பட்டை புரிந்துகொண்டு, தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியிருக்கிறார் முகேன் ராவ்.

Gallery