பிக்பாஸ் 7ல் இந்த கவர்ச்சி நடிகையா!! பெண் பயில்வானை தூக்கி டிஆர்பி ஏத்தபோகும் கமல்..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி தற்போது 6 சீசன் முடிந்து 7வது சீசனுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த பிக்பாஸ் 7 சீசன் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியிட்டனர் பிக்பாஸ் குழுவினர். அதில் ஒரு வீடு இல்ல இரண்டு வீடு என்று கமல் ஹாசன் ஒரு உண்மையை கூறினார்.
அப்படியென்றால் வீடு இரண்டாக இருந்து இரு வீட்டுக்கும் போட்டி, சண்டை என்று ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் பெயர் இணையத்தில் கசிந்தும் வருகிறது.
தற்போது கவர்ச்சி புயல் நடிகையாக இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை ஷகீலா தான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் கசிந்துள்ளது.
தற்போது இணையத்தில் பயில்வானை போல் சரமாறியாக பேசி வீடியோக்கள் மூலம் அதிரவைத்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த, காயத்ரி ரகுராமாக திகழ்வாரோ என்றும் கூறப்படுகிறது.