ஷிவானி அம்மாவையும் விட்டுவைக்காத பிரபலம்.. பிறந்த நாளில் பிக்பாஸ் பாலாஜி செய்த செயல்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியில் ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் 4 சீசனை கடந்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் பெரியளவில் பேசப்பட்ட பிக்பாஸ் பிரபலங்களின் ஜோடியாக ஷிவானி - பாலாஜி இருந்தனர்.

பாலாஜி மீது ஏற்பட்ட காதலால் ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் வந்தே திட்டித்தீர்த்து பரபரப்பை ஏற்படுத்தினார். டிஆர்பிக்காக நடந்தது என்று கூறப்பட்டாலும் சில கருத்து வேறுபாடுகள் அம்மாவிற்கு மகளுக்கும் இடையில் தோன்றியது. ஷிவானியை அவரது அம்மா கடுமையாக திட்டினார் என்பதும் பாலாஜியிடம் மட்டும் தான் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தெரிந்த ஒன்று.

ஆனால் தற்போது அது குறைந்து பாலாஜியும் ஷிவானியும் மிகவும் நெருக்கமாக இருந்து பழகி வருகிறார்கள். எப்போது இணையத்தில் க்ளாமரால் கலக்கி வரும் ஷிவானி சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பாலாஜி கலந்து கொண்டுள்ளார்.

அவர் ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள் கேக் ஊட்டும் புகைப்படம், மற்றும் ஷிவானி உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஆகியவை தற்போது வைரலாகி ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

அதைவிட பாலாஜி ஷிவானியின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களும் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்