அபிஷேக் லூசு மாதிரி பேசுவான், பங்கம் செய்த ப்ரியங்கா

priyanka biggboss 5 biggboss promo
By Tony Oct 06, 2021 06:12 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பில் இருப்பது. அந்த வகையில் தற்போது 5வது சீசன் தொடங்கியுள்ளது.

இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் பலரும் யாரை தங்கள் பேவரட்டாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

இந்நிலையில் ப்ரியங்காவிற்கு ஏற்கனவே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் அவர் செம்ம ஜாலியாக எல்லோரையும் கலாய்த்து வருகின்றார்.

நேற்று இமான் அண்ணாச்சியிடம் அபிஷேக் குறித்து பேசி வந்தார், அப்போது அபிஷேக்கை வைத்துக்கொண்டே, ‘அண்ணே இவன் வீடியோல பாத்துருக்கீங்களா?’ என கேட்டார்.

அதற்கு இமான் அண்ணாச்சி ‘இப்படி தான் அங்கையும் பேசுவானா’ என்று கேட்க, ப்ரியங்கா அதற்கு, ஆமாம், இப்படித்தான் லூசுத்தனமாக பேசிட்டு இருப்பான் என்று சொல்லி கலாய்த்தார்.