திருமணமாகி 8 மாதத்தில் கணவர் தற்கொலை! வைரலாகும் பிக்பாஸ் பவானியின் திருமண வீடியோ!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் பவானி ரெட்டி. தெலுங்கு நடிகையாக ஒருசில படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த பவானி சில ஆண்டுகளுக்கு முன் பிரதீப்குமார் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 மாதத்தில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் பல ஆண்டுகள் விலகி இருந்து பின் தற்போது பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாதியிலேயே தன்னை விட்டு விட்டுப் போனதையும் அறிந்து அவர் சாகும் போது தான் அழவில்லை என்றும் அவர் மீது கோபம் தான் வந்தது என்றும் கூறியது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ள பவானியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது அவரின் திருமண வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்த சம்பவத்தை தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கிளரிவிடுவது ஒருசில ரசிகர்களுக்கு வெறுப்பை உருவாக்கி விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்