ஆட்டோவில் சென்றாரா தாமரைச்செல்வி! பிக்பாஸ் கொடுத்த மரியாதை இதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தவாரத்துடன் இறுதி போட்டி நடந்து முடியும் தருவாயில் இருக்கிறது. பிக்பாஸ் 5 சீசனில் தற்போது 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு சென்று பல கடுமையான போட்டிகளை சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தாமரை, பாவ்னியில் யார் வெளியேறுவார் என்ற ஆர்வம் இருந்த நிலையில் தாமரைசெல்வி வீட்டினை விட்டு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் 5 வீட்டினை விட்டு வெளியேறிய தாமரை கமலுடன் பேசி முடித்த பின் நிகழ்ச்சியை விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார்.

பின் வீட்டில் விளக்கேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஐக்கி பெர்ரியுடன் வீடியோகால் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்