லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் 6ல் களமிறங்கவிருக்கும் வெளிநாட்டு பிரபலம்? இதுதான் டிவிஸ்ட்..

Bigg Boss
By Edward Oct 01, 2022 10:01 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியின் 6 வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இந்தவரும் புதுவிதமாக பிரபலங்களை தவிர்த்து 4 பேர் பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அவர்களை தொடர்ந்து யார் யார் போட்டியாளர்களாக களமிரங்கவுள்ளனர் என்ற லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் எப்படி இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அறிமுகமாகினாரோ,

அதேபோல் இலங்கையை சேர்ந்து ஒரு போட்டியாளரை பிக்பாஸ் 6ல் இறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்கான ஆடிஷனும் சமீபத்தில் நடைபெற்றுள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.