திமிராக பேசிய ஆதிரை..கடுப்பான விஜய் சேதுபதி!! பிக்பாஸ் சீசன் 9 பிரமோ..
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9. தற்போது 5 நாட்கள் ஆகிய நிலையில் 20 போட்டியாளர்களுக்கிடையே போட்டிகள் சண்டைகள் கடுமையாக நடந்து வருகிறது. முதல் வாரத்தில் ஏற்கனவே மன உளைச்சலால் நந்தினி வெளியேற்றப்பட்ட நிலையில், முதல் எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமிராக பேசிய ஆதிரை
இந்நிலையில் சனிக்கிழமை எபிசோட்டில், போட்டியாளர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டார். அப்போது சபரி, விக்ர, FJ, பிரவீன் போன்றவர்கள் எழுந்து நின்று பெயரை சொல்ல, ஆதிரை மட்டும் எழுந்து நிக்காமல் ஆதிரை என்று கையை தூக்கி பெயரை சொல்லியிருக்கிறார். இதனை கண்ட விஜய் சேதுபதி, உங்களுக்கு முன்னாடி 4 பேர் எழுந்து நின்று சொன்னாங்க என்றதும் அதற்கு ஆதிரை ஓ.கே என்று கூறியிருக்கிறார்.
கடுப்பான விஜய்
கடுப்பான விஜய் சேதுபதி, ஓ.கேன்னா என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்கு ஆதிரை, நான் நார்மலாகத்தான் சொன்னேன் என்றதும் நான்கு பேர் எழுந்து நின்று பெயரை சொல்லும்போது அதை பிரேக் செய்ய வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது என்றார்.
அதற்கு ஆதிரை, பிரேக் செய்கிறேன் என்று இல்லை சார், அது அவர்கள் விருப்பம், இது என் விருப்பம் என்று கூறினார். மேலும் பேசிய விஜய்சேதுபதி, உங்கள் விருப்பத்திற்கு இருக்க இங்கு வரவில்லை.
நாம் ஒரு விஷயத்தை விவாதிக்கும்போது அது வேறு, நாம் வேறு என்று புரிந்து கொள்ளத்தெரிய வேண்டும், இல்லை என்றால் எல்லாவற்றையும் பர்சனலாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு நமக்குத்தான், அது நல்லது இல்லை என்று கூறி அட்வைஸ் செய்துள்ளார்.
இதற்கு சிலரும் ஆதிரை கண்டித்தும், விஜய் சேதுபதியை விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#Day6 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 11, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/rUuFRWGHnw