50 லட்சத்துல டேக்ஸ் பிடிப்பு போக பாதியை விட்டுகொடுத்த பிக்பாஸ் அசீம்!! ரசிகர்களின் கருத்து இதுதான்..

Bigg Boss Star Vijay
By Edward Jan 25, 2023 12:00 PM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஞாயிற்று கிழமையோடு நிறைவுக்கு வந்துள்ளது. சீசன் 6ன் டைட்டில் வின்னராக அசீம் பட்டத்தை அதிக வாக்குகளுடன் பெற்றுள்ளார்.

சுமார் 50 லட்சம் பரிசு தொகையுடன் அசீம் கோப்பையை கைப்பற்றி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அசீம் தான் வாங்கிய 50 லட்சம் பரிசு தொகையில் இருந்து பாதியை கொரானாவில் உயிரிழந்த குடும்பத்தினரின் படிப்பிற்காக கொடுத்துள்ளார் என்ற வீடியோவை அசீம் வெளியிட்டுள்ளார்.

இதற்கு சிலர் 50 லட்சம் பரிசு தொகையில் கிட்டத்தட்ட வருமான வரி போக 35 லட்சம் வரையில் தான் அசீம் கையில் பெரும் தொகை.

அப்படியென்றால் அதில் பாதி தொகை 25 கொடுப்பாரா என்றும் அப்படி கொடுத்தால் பாராட்டக்குரியவர் என்றும் பலர் வாழ்த்து கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.