பிக்பாஸ் அட்ல்டிமேட் டைட்டில் வின்னர் இவரா? அதுகுல்லையா இறுதி போட்டி ரிசல்ட் வந்துருச்சு?

julie ramyapandian balajimurugadass thamarai niroop biggbossultimate
By Edward Mar 29, 2022 12:44 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் 24 நேரமும் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 14 போட்டியாளர்களுடன் நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆரம்பித்துவைத்தார். சில வாரங்களுக்கு பின் படப்பிடிப்பின் கால்ஷீல் பிரச்சனையால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கமல்ஹாசன்.

எலிமினேட் லிஸ்ட் :-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்தம் 5 சீசனில் கலந்து கொண்டவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். சுஜா வருணி, ஷாரிக், அபிநய், வனிதா, தாடி பாலாஜி, சினேகன், அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, சதிஷ் போன்றவர்கள் எலிமினேட் ஆகினர்.

இதில் வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நிலை பிரச்சனையால் நிகழ்ச்சியை விட்டு வாக்கவுட்டாகினார்கள். இதையடுத்து சிறப்பு விருந்தினர்களாக கேபிஒய் தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் ஒருவாரம் உள்ளே இருந்து கடந்த வாரம் வெளியேறினர்.

தற்போது அவரவரின் தனித்துவத்தை வைத்து வரிசைப்படுத்தும் போட்டி நடந்துள்ளது. அந்நிகழ்வு நடக்கும் போது 3 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை யார் எடுத்துக்கொண்டு செல்வார் என்று இன்னும் தெரியவில்லை.

கடைசி 5 இவர்களா:-

ஆரம்பித்து 58 நாட்கள் சென்ற நிலையில் 70 வது நாளான ஏப்ரல் 9 ஆம் தேதி சனிக்கிழமை இறுதி போட்டி நடைபெறவுள்ளதாம். இந்நிலையில் இதுவரை பல வாரங்கள் மக்கள் முதலாவதாக காப்பாற்றி வருகிறவர் பாலாஜி முருகதாஸ் தான்.

அதேபோல் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் ஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்களிலும் சரி டாஸ்க்கிலும் சரி கோபத்தினை கண்ட்ரோல் செய்து சாதுவாக பேசி வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இதனால் பாலாஜி தான் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை கைப்பற்றுவார் என்ற செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாமரை அல்லது ஜுலி இரண்டு மூன்று இடங்களை பெறுவதாகவும் நிரூப் அபிராமி, ரம்யா பாண்டியன் அடுத்தடுத்த இடத்தினை பெறுவார்கள் என்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.