பிக்பாஸ் 5ல் இந்த நடிகைகளா! வாய்ப்பிளக்க வைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்..

kamal female biggboss5
By Jon Mar 05, 2021 03:23 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. பாலிவுட்டில் ஆரம்பித்து தற்போது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஆரம்பித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது பிக்பாஸ்.

பிக்பாஸ் தமிழ் சமீபத்தில் கொரானா லாக்டவுன் முடிந்து கடந்த ஆண்டு ஆரம்பித்து 2021 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முடிந்துள்ளது. இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 கூடிய சீக்கிரமே ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 5ன் போட்டியாளர்களின் லிஸ்ட் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதில் முக்கிய போட்டியாளர்களாக களமிறக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தர்ஷா குப்தா, பவித்ரா, அஸ்வின், சிவாங்கி, பாலா, புகழ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க ஸ்ரீ ரெட்டி, ராய் லட்சுமி, பூனம் பாஜ்வா, கிரண் ரத்தோட் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மொத்த போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், ராதாரவி, ஆகியோரிடமும் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா நிலையில், இணையத்தில் இவர்கள் தான் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.