உங்க மேல ரொம்ப கோபம்!! தீபக்குடன் பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் பேசிய வீடியோ..
பிக் பாஸ் 8 முத்துக்குமரன்
கடந்த பிக்பாஸ் 7 சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறி, அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த 8ம் சீசன் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிறைவு பெற்றது.
பைனலில், ரயான், விஷால், முத்துக்குமரன், செளந்தர்யா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் ஜெயித்தார். அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், சக போட்டியாளர்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.
யோகா மாஸ்டர் கவிதா
டைட்டில் வின்னர் முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் அண்ணன் போல் பார்த்த தீபக் விட்டிற்கு சென்று நன்றியையும் தெரிவித்தார். மேலும் ஒரு வீடியோவில், தீபக்கின் யோகா டீச்சரான கவிதாவிடம், ரொம்ப ரொம்ப நன்றி, அப்புறம் உங்க மேல பயங்கர கோபம்.
நான், விஷால், அருண், ரயான் எல்லாம் தாண்டி ஓடிட்டு இருக்கேன், ஆனால் இவரை(தீபக்) தாண்டி ஓடமுடியவில்லை. 45 வயசுல இந்த மனுஷன ரெடி பண்ணி அனுப்பி வைத்து எங்களை பாடாபடுத்திவிட்டீர்கள்.
ஆனால் ரொம்ப நன்றி, எங்கள் அண்ணன் அவ்வளவோ விஷயங்கள் செய்ய நீங்கள் ஆதாரமாக இருந்ததற்கு நன்றி என்று முத்துக்குமரன் கூறியிருக்கிறார். தீபக் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியும் யோகா மாஸ்டர் கவிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
#Muthukumaran about #Deepak ‘s fitness at the age of 45 🔥😍#BiggBossTamil8 pic.twitter.com/R7HpxzcGwU
— Dark Knight (@dark_knight7421) January 21, 2025