என் மனைவிக்கிட்ட என்ன பேச்சு..விஷ்ணு ஆடியோவை வைத்து மிரட்டிய பிக்பாஸ் ரவீந்தர்...
ரவீந்தர் - விஷ்ணு
தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது அவரது எக்ஸ் தள பக்கத்தில் ரிவ்யூவர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.
அப்போது ரவீந்தருக்கும் விஷ்ணுவுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரவீந்தர் முத்துக்குமரன் தான் வெற்றிப்பெருவார் என்றும் செளந்தர்யாவை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.
மனைவியிடம் பேசிய ஆடியோ
இதற்கு விஷ்ணு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதன்பின் இதுபற்றி ரவீந்தர் இப்படியாக பேசியதை அவரது மனைவி மகாலட்சுமிக்கு கால் செய்து விஷ்ணு பேசியிருக்கிறார்.
மற்றொரு நாளில் நீ என்னுடைய மனைவிக்கு போன் பண்ணி பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது, அதை நான் லீக் செய்யவா என்று மிரட்டி இருக்கிறார் ரவீந்தர். பலர் முன்னிலையில் ரவீந்தர், விஷ்ணு சண்டைப்போட்டது லவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.