பிக்பாஸ் சீசன் 10 டைட்டில் வின்னர் இவங்க ஆகலாம்!! சீரியல் இயக்குநர் மனைவி ஓபன் டாக்..
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 10ல் இருந்து பிளாக் பாண்டி தானாக வெளியேறியதை அடுத்து, சாவின்யா, ஜாவீத், மணிவண்ணன், லட்சுமி பிரியா உள்ளிட்டவர்கள் வெளியேறினார்.

இந்த வாரம் லீடர் எக்ஸின் டாஸ்கில் லட்சுமி பிரியா வெளியேறியதை அடுத்து தந்தை மரணமடைந்ததால் ஆனந்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
தற்போது இந்த வார எவிக்ஷனில் சாந்தினி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். பின் மீண்டும் லட்சுமி பிரியா உள்ளிட்ட எவிக்டான 3 பேர் வீட்டிற்குள் செல்லவுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சாய் பிரமோதிதா
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களை இயக்கி வரும் இயக்குநர் பிரவீன் பென்னட்டின் மனைவியும் பிரபலமுமான சாய் பிரமோதிதா பேட்டியொன்றில் கலந்து கொண்டு பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆவார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், பிக்பாஸ் 10 டைட்டிலை வின் பண்றத்துக்கு கண்டிப்பாக ஷாதிகாவை சொல்லுவேன். அப்புறம் லட்சுமி பிரியா நல்ல போட்டியாளர் தான் என்றும் முனியம்மா, ஜேசன் கெளஷி தேராத போட்டியாளர் என்று சொல்வேன் என்றும் கூறியிருக்கிறார்.