மிச்சல் சாப்பிட இத்தனை லட்சம்!! 42 நாளில் அந்த வேலைக்கே லட்சத்தில் சம்பளம் வாங்கிய நிவாஷினி..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி கமல் ஹாசன் தொகுத்து வழங்கி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
21 போட்டியாளர்கள் வீட்டில் அனுப்பட்ட நிலையில் கடந்த வார வரையில் ஜிபி முத்து தானா வெளியேறியதை தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷ்ரினா, மகேஷ்வரி போன்றவர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் செல்லவுள்ளார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது.
#Kolaru - Last Day of Silmisham ??♂️??♂️#Asalkolaar #BiggBossTamil#BiggBossTamil6 #Asal #Nivashini pic.twitter.com/W41QEOnjSe
— VCD (@VCDtweets) October 29, 2022
அதற்கேற்ப அசல் கோளாறுடன் ரொமான்ஸில் ஈடுபட்டு வந்த நிவாஷினி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டார்.
எந்தவொரு ஆக்டிவேஷனும் இல்லாமல் மிச்சர் சாப்பிட்டு வந்த நிவாஷினி விளையாட்டில் கவனம் செலுத்த தவறி மக்கள் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டார்.
இந்நிலையில் 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிவாஷினி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு 5 லட்சம் வரை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெறும் அசல் கோளாறுடன் ரொமான்ஸ் மிச்சர் சாப்பிட இவ்வளவு சம்பளமா என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.