வெளியேறிய நந்தினி!! பிக்பாஸ் சீசன் 9ல் 2-வதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான்

Vijay Sethupathi Bigg Boss Bigg boss 9 tamil Aurora Sinclair Praveen Gandhi
By Edward Oct 11, 2025 10:32 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9. தற்போது 5 நாட்கள் ஆகிய நிலையில் 20 போட்டியாளர்களுக்கிடையே போட்டிகள் சண்டைகள் கடுமையாக நடந்து வருகிறது.

வெளியேறிய நந்தினி!! பிக்பாஸ் சீசன் 9ல் 2-வதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான் | Biggbosstamil9 First Week Evicted Who Viral News

தற்போது பிக்பாஸ் ஆரம்பித்து முதல் வாரமாகிய நிலையில் நேற்றிரவு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் போட்டியாளர் நந்தினி, பிக்பாஸால் வெளியேற்றப்பட்டார்.

சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாகவும் வீட்டிற்குள் இருக்க முடியாது என்று நந்தினி கூறியதாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1st எவிக்ட்

இதனை தொடர்ந்து முதல் வார எவிக்ஷன் அறிவிக்கப்போகும் ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அதில் யார் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் பிரவீன் காந்தி தான், முதல் ஆளாக பிக்பாஸ் 9ல் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

வெளியேறிய நந்தினி!! பிக்பாஸ் சீசன் 9ல் 2-வதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான் | Biggbosstamil9 First Week Evicted Who Viral News