கலையரசனை அகோரியா தெரியும்...ஐநா சபையில் பேசியிருக்காராம்!! சாதனைகள் இதான்..
அகோரி கலையரசன்
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது 4வது நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனிப்பட்ட கதைகள், சவால்கள் அரங்கேறி வரும் நிலையில் அகோரி கலையரசன் என்று கூறப்பட்டு வரும் அவரின் உண்மையான முகம் என்ன என்று சக போட்டியாளர்களிடம் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், நான் கோப்பையை ஜெயிக்க பிக்பாஸுக்கு வரவில்லை, நான் இதுவரைக்கும் வாங்கிக்குவித்த கோப்பைகளை வைக்கவே என்னிடம் இடமில்லை. நான் இங்கு வந்ததற்கான உண்மையான காரணமே என்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வதுதான். நான் ஒரு அகோரியாக இருந்ததால், என்னுடைய பிள்ளைகள், அகோரி பிள்ளைகள் என்று பார்ப்பட்டு வருவதாலும் அவர்களுக்கு பள்ளியில் கூட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் என் குட்ம்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்ள, இந்த அடையாளத்தை மாற்றத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.
ஐநா சபை
இதனையடுத்து சக போட்டியாளர்களிடம் பேசி வந்த கலையரசன், கலையரசன் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இளைஞர் சங்கம் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளின் (United Nations International Youth Society and Sustainable Development Goals) இளைஞர் தூதுவராக (Youth Ambassador) சென்று பேசிவிட்டு வந்தேன் என்று கூறி சக போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
மேலும் நாட்டுப்புற கலைகளில் சாதனை படைத்ததற்காக பல கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறேன். தன் கண்களின் இமைகள் வழியே ஊசிகளை குத்திக்கொண்டு கரகாட்டம் ஆடி சாதனை படைத்திருக்கிறேன். மதிப்புறு முனைவர்(Honorary Doctorate) பட்டத்தையும் பெற்றிருக்கிறேன்.
கிராமியப்புதல்வன் அக்டமியின் நிறுவனர் என்றும் கூறி ஷாக் கொடுத்துள்ளார் கலையரசன். இதெல்லாம் உண்மையா என்று நெட்டிசன்கள் அவர் பேசியதை அடுத்து கலையரசனின் வரலாற்றை தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்படி இருந்தாலும் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கலையரசன் சொன்னதை முழுதாக நம்பாமல் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் இந்தவார நாமினேஷனில் 12 வாக்குகள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.