காந்தாரா படத்திற்கு முதுகெலும்பாக இருந்த நடிகர் ரிஷப் மனைவி.. காதல் மலர்ந்தது எப்படி?
காந்தாரா சாப்டர் 1
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரிக்க ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ஜெயராம், குல்ஷன், ராகேஷ் பூஜாரி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி ஷெட்டி முன்பு பேட்டி ஒன்றில் இவர்கள் காதல் கதை குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படித்தான்!
அதில், " ரக்ஷித் ஷெட்டியின் 'உளிதவரு கண்டந்தே' படம் பார்த்த பின் நானும் என் அலுவலக நண்பர்களும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் ரசிகர்களாகிவிட்டோம்.
அவரது அடுத்த படமான 'ரிக்கி' வெளியானபோது, வார இறுதியில் நாங்கள் அனைவரும் ரிக்கி பார்க்க தியேட்டருக்குச் சென்றிருந்தோம். அப்போது பல ரசிகர்கள் நடிகர் ரக்ஷித் ஷெட்டியைச் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.
நானும் சென்று போட்டோ எடுத்து கொண்டேன். இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் ஒரே ஊர்க்காரர்கள், குந்தாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின் ஃபேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆகி, பின் காதலர்கள் ஆகி விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.