பணப்பெட்டியை தட்டித்தூக்கிய போட்டியாளர் இவர்தான்!! மாஸ்டர் வேலை பார்த்தது யார்?

Bigg boss 9 tamil Aurora Sinclair Gana Vinoth
By Edward Jan 08, 2026 05:13 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

பணப்பெட்டியை தட்டித்தூக்கிய போட்டியாளர் இவர்தான்!! மாஸ்டர் வேலை பார்த்தது யார்? | Biggbosstamil9 Money Box Taken Player Whose

தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வரும் நிலையில், பணப்பெட்டியை போட்டியாளர் கானா வினோத் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாயில் இருந்து 18 லட்சம் ரூபாய் வரை அந்த பணப்பெட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அரோரா, வினோத்திடம் பேசிய பேச்சுக்கள் தான் அவரை மாற்றிவிட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.