No ஜனநாயகன் பொங்கல்!!படத்துக்கு இடைக்கால தடை போட்ட உயர் நீதிமன்றம்..

Vijay Gossip Today JanaNayagan Cinema Update Cinema News
By Edward Jan 09, 2026 11:45 AM GMT
Report

No ஜனநாயகன் பொங்கல்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் இன்று ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் பிரச்சனை முடியாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தணிக்கை சான்றுதழ் வழங்குவதில் சிக்க ஏற்பட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கு, இன்று காலை, 10.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பி.டி. தீர்ப்பு வழங்கியுள்ளார்.

No ஜனநாயகன் பொங்கல்!!படத்துக்கு இடைக்கால தடை போட்ட உயர் நீதிமன்றம்.. | Jananayagan Censor Certificat Chief Justice Stayed

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. மேலும் மறுத்தணிக்கைக்கான உத்தரவையும் அவர் ரத்து செய்திருந்தார். இதனை எதிர்ப்பு மத்திய தணிக்கை குழு மேல்முறையீட்டுக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு மாலை 3.30 மணிக்கு தள்ளி வைத்திருந்தது.

No ஜனநாயகன் பொங்கல்!!படத்துக்கு இடைக்கால தடை போட்ட உயர் நீதிமன்றம்.. | Jananayagan Censor Certificat Chief Justice Stayed

இடைக்கால தடை

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை வழங்க வேண்டும் என்று தனிநீதியின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு. மேலும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று அளிக்க கோரிய வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

No ஜனநாயகன் பொங்கல்!!படத்துக்கு இடைக்கால தடை போட்ட உயர் நீதிமன்றம்.. | Jananayagan Censor Certificat Chief Justice Stayed

மேலும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தை வெளியிட முடியும்? பட வெளியீட்டு தேதியை நிர்ணயித்துவிட்டு அதை வைத்து தணிக்கை அமைப்பின் மீது அழுத்தம் கொடுக்க முடியாது.

15 நாட்கள் காத்துவிட்டீர்கள், இன்னும் கொஞ்சம் நாட்கள் காத்திருக்க முடியாதா? என்று ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.