பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்புவால் வெளியேறப்போவது யார்! வனிதாவால் ஏற்பட்ட மாற்றம்..

simbu kamalhaasan biggbossultimate vanittha
By Edward Feb 26, 2022 05:59 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி வந்தார். இந்திய 2, விக்ரம் போன்ற படங்களின் கால்ஷீட்டிற்காக நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கைவிட்டார்.

இதனால் டிஆர்பி குறைய வாய்ப்பிருப்பதால் யார் அவர் இடத்தை பிடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்று நிகழ்ச்சி நிறுவனமே அறிவித்தது. அவருக்கு ஒரு நாளைக்கு 1 கோடி என 5 வாரத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கவுள்ளனர்.

இந்த வாரம் சிம்புவால் வெளியேற்றப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வாரம் இரு எவிக்‌ஷன் இருந்ததாலும் நடிகை வனிதா திடீரென நிகழ்ச்சியை விட்டு உடல் நிலை சரியில்லை என்ற சாக்கு சொல்லு விலகியதாலும் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.