பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான்!! போட்டியாளர்களே கூறிய உண்மை...
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து சிறப்பான முறையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.
கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாகவும் டைட்டில் வின்னரை குறிப்பிட்ட நாட்களிலேயே யூகிக்க முடியாமல் இருப்பதாகவும் மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த சீசனில் 93 நாட்களை கடந்தும் யார் டைட்டில் வின்னர் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாமல் இருக்கிறது.
அதில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் போன்ற மூவரும் கடுமையான போட்டியை கொடுத்து வந்தாலும் ஏடாகுடமாக ஏதாவது ஒன்றினை செய்து பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் வாங்குவார் என்பதற்கு பலரும் விஜே அர்ச்சனாவை தான் குறிப்பிட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் தான் அப்படி கூறுகிறார்கள் என்றால், பிக்பாஸ் போட்டியாளர்களும் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று கூறிய பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது. பூர்ணிமா மற்றும் விசித்ரா இருவரும் தான் அப்படி பேசிக்கொள்கிறார்கள்.