11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு 12ம் முறை சிக்கிய நபர்! அவ்ளோ வெறி மாப்பிளைக்கு

Corona Vaccine Covaxin Bihar 11 times covid vaccine
By Parthiban.A Jan 07, 2022 02:30 PM GMT
Report

தற்போது கொரோனா பரவல் மூன்றாம் அலை தொடங்கி இருக்கும் நிலையில் ஏற்கனவே இரண்டு டோஸ் போட்டு கொண்டவர்கள் கூட தற்போது பூஸ்டர் டோஸ் போட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரின் மாதேபுரா பகுதியை சேர்த்த 84 வயதான நபர் Brahmdeo என்பவர் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அவர் 12வது முறையாக தடுப்பூசி போடுவதற்காக சென்ற போது சிக்கிக்கொண்டார்.

இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் ஒரே ஆதார் கார்டு மற்றும் மொபைல் நம்பரை பயன்படுத்தி எப்படி இத்தனை முறை தடுப்பூசி போட்டார் என அனைவருக்கும் ஷாக் ஏற்பட்டு உள்ளது.

Brahmdeo தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களை டைரியில் எழுதிவைத்து மீடியாவிடம் காட்டி இருக்கிறார்.

தடுப்பூசி வந்த புதிதில் அதை போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இவரோ இத்தனை முறை போட்டுகொண்டு இருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.