திருமணத்திற்கு முன் விஜய்யுடன் கிசுகிசு..காதல் பற்றி வெளிப்படையாக சொல்ல பயந்த கீர்த்தி சுரேஷ்..பிரபல ஓப்பன் டாக்..
கீர்த்தி சுரேஷ் திருமணம்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12 ஆம்தேதி 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்தார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் - விஜய் பற்றி சமீபகாலமாக வதந்தி செய்திகள் வெளியானது குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு தகவலை கொடுத்துள்ளார்.
விஜய்யுடன் கிசுகிசு
அதில், ஒரு நடிகை மீது இப்படியான கிசுகிசுக்கள் வரும், அதையெல்லாம் கடந்த இல்லர வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது நல்ல விஷயம், அந்தமாதிரியான விஷயம் கீர்த்தி சுரேஷிற்கு நடந்துள்ளது, அதற்கு நாம் வாழ்த்தவேண்டும்.
அதேபோல் விஜய்யோடு கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே நடித்திருக்கிறார், அவர்களிடம் நட்பு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்த கணவர், காதலராக இருக்கும்போதே அவரது பிறந்தநாளில் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். இதை கீர்த்தி சுரேஷே எனக்கு கால் செய்து கூறியிருக்கிறார்.
இந்த மாதிரியாக செய்தி (விஜய்யுடன் ரகசிய காதல்) வெளியில் வருகிறது, அதெல்லாம் தவறானது, நான் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே ஒருவரை காதலிக்கிறேன், அவரைத்தான் திருமணம் செய்யவுள்ளேன்.
இந்த உண்மையை வெளியில் சொல்லமுடியவில்லை, என் வீட்டிலேயே அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை அதுவே ஒரு போராட்டமாக இருக்கிறது, அதனால் அதை வெளிப்படையாக கூறமுடியவில்லை. இந்நேரத்தில் இப்படியான செய்தி வருகிறது என்று கீர்த்தி சுரேஷ் என்னிடம் கூறியதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல் பிஸ்மி அளித்ததை தான் இங்கு பதிவிட்டிருக்கிறோமே தவிர, விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.