கமல் ஹாசனா வேண்டவே வேண்டாம்!! கண்டீசன் போட்ட சினேகாவை ஓகே செய்த ஆண்டவர்..
உலக நாயகன் கமல் ஹாசன் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகைகளுடன் நெருக்கமாகவும் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதும் தான். அப்படி கதாநாயகனாக அறிமுகமானது முதல் தற்போது வரை அவர் படத்தில் ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சியை வைத்துவிடுவார். இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் கமல் ஹாசன் பற்றிய மோசமான செயலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
கமல் ஹாசனிடம் தனக்கு ஒரு கேள்வியை கேட்க தோன்றியது. அந்த கேள்வி பல நாட்களாக இருந்தது, அதற்கு காரணம், பாமர மக்கள் கூட கமல் ஹாசனை கிண்டல், கேலி செய்து பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்படி கமல் மீது அவர்கள் வைக்கும் விமர்சனம் என்றால், நடிகைகளின் உதட்டை கவ்வி முத்தம் கொடுக்கிறார் என்பது தான். இந்த ஒரு காரணம் தான் கமல் மீது இருப்பது, எனக்கு வருத்தமாக உள்ளது.
கமலுக்கு ஜோடியாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகை சினேகா நடித்தார்கள். அந்த படத்தில் நடிக்க சினேகாவிடம் படத்தின் இயக்குனர் அனுகியபோது, கமல் ஹாசனுடன் நடிக்க எனக்கு ஆசை தான். ஆனால், அதே நேரம் அவருடன் நடிக்க அச்சமாக இருக்கிறது. அதற்கு காரணம், உதட்டோடு உதவு முத்தம் கொடுக்கும் காட்சி வைத்துவிடுவார்.
அதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று சினேகா சொன்னதாக ஒரு தகவல் இருந்தது. அந்த மாதிரியான காட்சிகள் இல்லை என்று உத்திரவாதம் கூறியதால் தான் சினேகா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
கமல் எவ்வளவு பெரிய நடிகர், அவரை வளர்ந்து வரும் நடிகை ஒருவர் முத்தக்காட்சியை வைத்து மதிப்பிடுகிறார்கள் என்பது கமலுக்கு எவ்வளவு பெரிய அவமானம். இதை வைத்து தான் கமல் ஹாசனிடம் அந்த கேள்வியை கேட்டேன். என்னவென்றால், படத்தில் லிப்லாக் சீனில் நடிக்கிறீர்கள்.
ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள், இனிமேல் அப்படியான காட்சியை வைப்பீர்களா? என்று கேட்டேன். உடனே கமல் முகம் மாறியதாகவும் அதற்கு அவர் கட்சி தலைவராகிவிட்டால், கக்கூஸ் போக கூடாதா என்ற பதிலை வேறுமாதிரியான வார்த்தையை பயன்படுத்தி கூறியதாகவும் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்
You May Like This Video