40 வருஷமா ரஜினிதான் சூப்பர் ஸ்டார்..ஆனா, விஜய் வளர்ச்சி பிடிக்கல!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி..
சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தை சீமான் அவர்கள் நேரில் சந்தித்து பேசியது பேசுபொருளாக மாறியது. இருவரும் அரசியல் குறித்து பேசியதாக சீமான் கூறியிருந்தார்.
இதுபற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி, இரண்டரை மணி நேரம் நிச்சயம் இருவரும் அரசியல் குறித்துதான் பேசியிருப்பார்கள். விஜய் அரசியல் கட்சி துவங்கியதால் அவரை வைத்துக்கொண்டு அரசியல் வண்டி ஓட்டிவிடலாம் என்று சீமான் நினைத்தார். அதனால் தான் சீமான் விஜய்யை விமர்சித்து வந்தார்.
பத்திரிக்கையாளர் பிஸ்மி
அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்து பேசினார். இப்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அதேநேரம் ரஜினிக்கு ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவா அரசியலை தமிழ் நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
அந்த ஆசையை மற்ற கட்சிகளோடு இணைந்து சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு சீமான் உடன்படுவார் என்பதால் தன்னுடைய ஆன்மீக அரசியலை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சி செய்திருக்கலாம். ஆனால் இது விஜய்க்கு எதிரான அரசியல் சந்திப்பு இல்லை.
ரஜினிக்கும் விஜய்க்கும்
ரஜினிக்கும் விஜய்க்கும் நேரடியான மோதல் எதுவும் இல்லை. தொழில் ரீதியான போட்டி மட்டும்தான். ஒரு காலத்தி கமல் ஹாசன் வார்கள் ரஜினிக்கு போட்டியாக இருந்தார். இப்போது விஜய் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு கீழ்தான் ரஜினி இருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ஆக இருந்த நம்மை விஜய் தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்ற ஒரு தொழில் ரீதியான போட்டிதான் ரஜினிக்கு இருப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.