நயன்தாராவுக்கு புஷ்பா புருஷன் தான் விக்னேஷ் சிவன்!! வெளுத்து வாங்கிய பிரபலம்...
நயன்தாரா பேட்டி
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், பிரபல சினிமா விமர்சகர்களை கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என 3 குரங்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் கெட்டதை பேசு, கேட்டதை கேளு, கெட்டதை பார் என சொல்லும் 3 குரங்குகள் என்னை பற்றி 50ல் 45 வீடியோவில் பேசி வருகிறார்கள்.
ஏனென்றால் என்னை பற்றி தப்பாக பேசி சம்பாதித்து வருகிறார்கள். என்னை பற்றி தப்பாக பேசி சம்பாதித்து சிலர் சாப்பிட்டால் எனக்கு சந்தோஷம் தான். அவங்க சம்பாதித்தாலும் சரி, தனுஷ் சம்பாதித்தாலும் சரி எனக்கு ஹாப்பி தான் என்று பேசியிருந்தார்.
வெளுத்து வாங்கிய பிஸ்மி
நயன் தாரா அப்படி கூறியது பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் பேட்டியொன்றில் அவரை வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார். அவர் அப்படி கூறியதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறோம். எங்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய நயன்தாராவுக்கு தெரியும், அவருடைய மறைக்கப்பட்ட பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும்.
அதை வெளியில் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் அப்படி பேசியிருக்கலாம். விக்னேஷ் சிவனிடம் நயன்தாராவின் புருஷன் என்ற அடிப்படையில் பணம் இருக்கு, அதுமூலம் தொழில் செய்றாங்க, அது தப்பில்லை.
அரசாங்க சொத்தை தான் வாங்க நினைப்பதுவிட ஒரு முட்டாள்தனம் எதுவும் இல்லை. நயன் தாராவின் புருஷன் என்பதை வைத்து தான் அவர் அரசு சொத்தை வாங்க நினைத்திருக்கிறார். புஷ்பா புருஷன் மாதிரிதான் விக்னேஷ் சிவன் என்று பிஸ்மி விமர்சித்து பேசியிருக்கிறார்.