என் மனைவி மகாலட்சுமிக்கு கால் செய்து பேசியதை லீக் செய்யவா? விஷ்ணுவை மிரட்டிய ரவீந்தர்
பிக்பாஸ் 8
தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது அவரது எக்ஸ் தள பக்கத்தில் ரிவ்யூவர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.
அப்போது ரவீந்தருக்கும் விஷ்ணுவுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரவீந்தர் முத்துக்குமரன் தான் வெற்றிப்பெருவார் என்றும் செளந்தர்யாவை விமர்சித்தும் பேசியிருக்கிறார். இதற்கு விஷ்ணு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமிக்கு போன்
அதிலும் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்து விஷ்ணு, ரவீந்தர் இப்படி தொடர்ச்சியாக பேசி வருவது தவறு என்று பேசி இருப்பதுபோல் தெரிகிறது. இதை ரவீந்தரிடம் மகாலட்சுமி கூறியிருக்கிறார். நேற்று ரவீந்தர் வழக்கம் போல் முத்துக்குமரனுக்கு சப்போர்ட் செய்து பேசும் போது குறுக்கிட்டு பேசியுள்ளார் விஷ்ணு.
அதற்கு ரவீந்தர் நீ செளந்தர்யாவுக்கு பிஆர் வேலை செய்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது, நான் முத்துகுமரனுக்கு அப்படி செய்யவில்லை. அதோ முத்துக்குமரன் உண்மையாக அந்த விளையாட்டில் விளையாடுவதால் தான் ஜெயிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
நீ என்னுடைய மனைவிக்கு போன் பண்ணி பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது, அதை நான் லீக் செய்யவா என்று மிரட்டி இருக்கிறார் ரவீந்தர். பலர் முன்னிலையில் ரவீந்தர், விஷ்ணு சண்டைப்போட்டது லவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.