இளையராஜாவுக்கு இது அவமானம் தான்? இசைஞானியை அவமானப்படுத்திய பத்திரிக்கையாளர்
தமிழ் சினிமாவில் இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 40 ஆயிரம் பாடல்கள் 1500 படங்கள் என இசையின் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். பல விருதுகளையும் புகழையும் பெற்றாலும் அவரின் சில நடவடிக்கையால் வெறுப்பை சம்பாதித்திக்கிறார்.
அந்தவகையில் சமீபத்தில் மத்திய அரசு இளையராஜாவை கவுடப்படுத்தும் விதமாக எம்பி பதவி வழங்கப்பட்டது. இதற்கு ரஜினி, கமல், தமிழக முதல்வர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறியிருந்தனர். இதற்கு சிலர் முன்னுரைக்கு கிடைத்த பரிசு என்று விமர்சித்து வந்தார்.
தற்போது பத்திரிக்கையாளர் பிஸ்மி இளையராஜாவுக்கு கொடுக்கப்பட எம்பி பதவியை விமர்சித்து காண்டமாக பேசியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியொன்றில், நரேந்திர மோடியை அம்பேத்கருக்கு நிகராக புகழ்ந்து ஒரு கட்டுரை முன்னுரையில் இளையராஜா எழுதி இருந்தார்.
அந்த முன்னுரை சர்ச்சையாகும் போது பல விருதுகள் வழங்கவுள்ளார்கள் என்று கேள்விகள் எழுந்து வந்தது. மோடிக்கு எழுதிய முன்னுரைக்கான கூலி தான் எம்பி பதவி என்றும் மக்கள் சிலர் எதிர்ப்பும் இருந்து வருகிறது. ராஜியசபா பதவி இளையராஜாவுக்கு கவுரவம் இல்லை அவமானம் தான் என்று காட்டமாக பேசியுள்ளார் பிஸ்மி.