யோக்கியனாக காட்ட வாய்ப்பு கொடுத்த இயக்குனர்!! வேண்டவே வேண்டாம் என தூக்கி எறிந்த நடிகை மனிஷா..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இயக்குனர் முதல் நடிகர் நடிகைகள் வரை பல விசயங்கள் பெரியளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் - இமான் சர்ச்சை முடிந்து, மன்சூர் அலிகான் - திரிஷா விசயம் சென்று கொண்டிருக்க இயக்குனர் சீனு ராமசாமி - நடிகை மனிஷா யாதவ் பிரச்சனை தான் தற்போது முக்கிய செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசுகையில், சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் படத்தின் போது ஷூட்டிங்கில் நடிகை மனிஷா யாதவிற்கு டார்ச்சர் செய்து வந்ததாக தன்னிடம் அவர் கூறியதாக பேட்டியில் கூறியிருந்தேன். இதை பார்த்த சீனு ராமசாமி குறித்த ஊடகத்திற்கு கால் செய்து தான் பேட்டியளித்து இந்த விசயத்தை கூறிய வீடியோவை டெலீட் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மனிஷா யாதவிடம் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி நடந்ததை மறைத்தும் என்னை விமர்சித்தும் பேசினார்.
மேலும் தனக்கு அவர் கால் செய்ததாகவும் அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை என்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார். இதன்பின் மனிஷா யாதவ் தன்னுடன் அடுத்த படத்திலும் நடிப்பார் என்று டிவிட்டரில் பகிர்ந்தார். இதன் பின்னணியில் சீனு ராமசாமி செய்த செயலை கூறுகிறேன் என்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் பிஸ்மி. அதில், அடுத்த படத்தில் மனிஷா யாதவை நடிக்க அழைப்புவிடுத்திருக்கிறார். ஆனால் அதை நிராகரித்திருக்கிறார் மனிஷா யாதவ்.
அதற்கு காரணம், இடம் பொருள் ஏவல் படத்தின் போது அவர் தனக்கு கொடுத்த கசப்பான அனுபவத்தை மறக்கவில்லை மன்னிக்கவில்லை என்பதால் தான். சீனு ராமசாமி மறுபடியும் மனிஷா யாதவிற்கு வாய்ப்பு தர காரணம், அதுதான் அவரின் தந்திரம்.
நான் (பிஸ்மி) சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய், அப்படியொரு சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை என்று மக்களை நம்ப வைக்க இந்த முயற்சியை செய்திருக்கிறார். இதை மனிஷா யாதவும் குறிப்பிட்டு ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.

விஜய், சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..
மேலும், சீனு ராமசாமி போன்ற வெறிப்பிடித்தவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று தான் இந்த விசயத்தை கூறினேன், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நோக்கமில்லை. அவர் தனக்கான தடையத்தை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். எனக்கு அவர் படங்கள் மீது மரியாதை இருக்கிறது. அதேநேரம் படைப்பு மட்டும் யோக்கியமாக இருக்க கூடாது.