எல்லாமே பலருக்கு தெரியும் சிவகார்த்திகேயன்!! யோக்கியனாக இருக்கணும்!! எச்சரித்து மிரட்டிய பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். இதுகுறித்து பல பிரபலங்கள் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து வந்த நிலையில், இதுகுறித்து பிஸ்மி பல விசயங்கள் எனக்கு தெரியும் என்றும் அதற்கான ஆதாரமும் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இமான் விசயம் என்பது இப்போது வெளியான தகவல், வெளியாகாமல் இருக்கும் தகவலும் இருக்கிறது. எனக்கு பல விசயம் தெரியும், அதை பொதுவெளியில் நான் பேசவிரும்பவில்லை.
அதேநேரம் சிவகார்த்திகேயன் ஒன்று என்ன உணரவேண்டும் என்றால், நம்ப செய்கிறது எதுவுமே யாருக்கே தெரியாது, நாம எல்லாருக்கும் பிரின்ஸ் தான் என்று நினைத்தார் என்றால் அதைவிட முட்டாள்த்தனம் எதுவுமே கிடையாது.
நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அது எல்லாமே பலருக்கும் தெரியும், அது எந்த நேரத்தில் வேணாலும் வெளியில் வரலாம், அந்த எச்சரிக்கையோடு நீங்கள் உங்களின் மிச்ச காலத்தை தொடரகேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், உங்களுக்கு ஒரு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த இடத்தை தக்கவைத்து அடுத்த இடத்தை நோக்கி போகணும் என்றால் உங்கள் தொழில் வாழ்க்கையில் மட்டும் இல்லை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் யோக்கியனாக இருக்க வேண்டும்.
அது ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த யோக்கியதனம் தான் மக்களிடம் அப்படியே நிற்கும் என்று சிவகார்த்திகேயனை எச்சரித்திருக்கிறார் பிஸ்மி.