கர்ப்பமாக இருக்கும் போது செய்ற செயலா இது? சீரியல் நடிகை ஐஸ்வர்யா கொடுத்த ஷாக் வீடியோ..
பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜேவாக அறிமுகமாகி அதன்பின் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா பிரபாகர். இதையடுத்து ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிவகார்த்தியுடன் ஜோடிபோட்டு நடனமாடிய ஐஸ்வர்யா கடந்த 2015ல் பிரபாகர் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
கர்ப்பகாலத்தின் போது குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் பெண் ஆரோக்கியமாக இருக்க எப்போது ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.