பொம்பள மாதிரி இருக்கான், சிங்கிள் பசங்க பிளாக் ஸ்டார் சுரேஷ் அம்மா எமோஷ்னல்..
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சிங்கிள் பசங்க. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக யூடியூப் பிரபலம் பிளாக் ஸ்டார் சுரேஷ் கலந்து கொண்டு வருகிறார்.
ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்து வந்த சுரேஷுக்கு சிங்கிள் பசங்க நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறது. இந்த வார எபிசோட்டில் தன்னுடைய அம்மாவை வரவழைத்த சுரேஷ், மிகவும் உருக்கமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
பிளாக் ஸ்டார் சுரேஷ் அம்மா
அதிலும் சுரேஷின் அம்மா, அவனை எல்லோரும் யேசுவாங்க, விரட்டுவிடுவாங்க. பொம்பள மாதிரி இருக்கான்னு அவனை ரொம்பவே பேசுனாங்க. அவன் விழுந்து விழுந்து தான் எந்திருச்சான், அதன்பலனாக இங்கு இருக்கான் என்று சுரேஷின் அம்மா உருகி பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து சுரேஷ் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுரேஷ் பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.