அஜித், ரஜினி, சூர்யா, விஜய்யை மொத்தமாக கலாய்த்த இயக்குனர்! இவருக்கு வேறவேலையே இலையா?

Ajith Kumar Rajinikanth Suriya Vijay Nelson Dilipkumar
By Edward Jun 07, 2022 09:19 AM GMT
Report

திரைத்துறையில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் படத்தை ஒட்டுமொத்தமாக கிண்டலாகவும், கேலியாகவு விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்குவது ஒருசிலர் இருக்கிறார்கள்.

அப்படி சமீபகாலமாக தமிழ் படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் படுமோசமான வார்த்தையாலும் உடல் ரீதியாக கிண்டல் செய்தும் வருகிறார் சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தினை எல்லைமீறிய விதத்தில் உடல் கேலி செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

தற்போது விக்ரம் படத்தை பார்த்து ஒருசில கருத்துக்களை கூறி வருகிறார். விக்ரம் படத்தில் கேமியோக்கே இந்த அளவு கொண்டாட்டலாம் பண்றோம்-னா இதுவே உங்க படம் மட்டும் வந்திருந்தா என்று சூர்யாவை கிண்டல் செய்த ஒரு மீம் புகைப்படத்தை வெளியிட்டு ET பரிதாபங்கள் என்று பதிவினை போட்டுள்ளார்.

இதேபோல், தல சிவாவை ரஜினிக்கு அனுப்பி வைத்தும், ரஜினி சிவாவை விஜய்க்கு அனுப்பி வைத்தும் தளபதி நெல்சனை ரஜினிக்கு அனுப்பி வைத்தும் உள்ளனர். இது எங்களுக்கு நாங்களே கொடுக்குற தண்டனை என்று விஜய், அஜித், ரஜினியையும் கிண்டல் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரஜினி, விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் நீங்கள் இயக்கிய படம் மட்டும் எப்படி இருக்கு என்று ப்ளூ சட்டை மாறனை கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.