விராட் கோலி மாதிரிதான் பிரபாஸ்!! கல்கி 2898 AD படத்தை வெச்சு செய்த பிரபலம்..

Kamal Haasan Prabhas Blue Sattai Maran Kalki 2898 AD
By Edward Jun 28, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் பல கோடி செலவில் உருவான படம் கல்கி 2898 AD. நேற்று ஜூன் 27 ஆம் தேதி உலகளவில் பல மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுபவதால் கல்கி படம் 1000 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி மாதிரிதான் பிரபாஸ்!! கல்கி 2898 AD படத்தை வெச்சு செய்த பிரபலம்.. | Blue Sattai Maaran Trolls Kalki 2898 Ad Prabhas Km

இந்நிலையில், கல்கி 2898 AD படம் வெளியாகிய முதல் நாளில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை பெற்றுள்ளது. எப்பவும் போல் ரிலீஸ் ஆகும் படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன, தற்போது கல்கி படத்தை பங்கமாக கலாய்த்து விமர்சனம் செய்துள்ளார்.

அவரின் வீடியோவில், மகாபாரத கதையின் கருவை எடுத்து, 800 வருடங்கள் கழித்து நடந்தால் எப்படி இருக்கும் என்ற இயக்குனரின் கற்பனை தான் கல்கி 2898 AD. பிளாக் அண்ட் ஒயிட் காலத்தின் கதை என்பதாலும் 800 ஆண்டுகள் கழித்து சொல்லும் கதை என்பதாலும் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும். ஆனால் அந்த உழைப்பு ஒன்றுமே இல்லை.

விராட் கோலி மாதிரிதான் பிரபாஸ்!! கல்கி 2898 AD படத்தை வெச்சு செய்த பிரபலம்.. | Blue Sattai Maaran Trolls Kalki 2898 Ad Prabhas Km

ரசிகர்களை கதைக்கும் இயக்குனர் இழுக்க வேண்டும். ரசிகர்கள் இதில் அப்படியொன்றும் இன்வால்வ் ஆகவில்லை. 800 ஆண்டுகள் கழித்து விராட் கோலி போல் தாடியை வைத்துக்கொண்டு தான் இருப்பார் போல பிரபாஸ். படத்தில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. இரும்பு குடோனை விட்டு கிளம்புவதற்கே இரண்டாம் பாதி வந்துவிடுகிறது.

படத்திற்கு வில்லன் கதாபாத்திரம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கனும், ஆனால் வில்லன் படுத்த படுக்கையில் இருக்கிறார். ஹீரோ, வில்லன் சந்தித்துக்கொள்வார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்பார்கள். நடந்தது நடந்து போச்சு இத்தோடு முடிச்சுக்குவோம், இரண்டாம் பாகம் எல்லாம் வேண்டாம் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசியிருக்கிறார்.