அறிவுஜீவி, யாரு இடியட்! 14 கேள்விகளை கேட்டு பார்த்திபனை மடக்கிய ப்ளூ சட்டை மாறன்
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்கத்தையும் நடிப்பையும் வெளிப்படத்தி வருபவர் இயக்குனர் பார்த்திபன். ஒத்து செருப்பு என்ற படத்தினை தொடர்ந்து 90 நிமிடம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் non-linear சிங்கிள் ஷாட் மூவியாகா இரவின் நிழல் படத்தினை எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியிலும் நட்சத்திரங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் விமர்சனத்தை சொல்லியதோடு, முதல் உலகின் non-linear படம் என்று இயக்குனர் பார்த்திபன் பொய் கூறி ஏமாற்றி வருகிறார் என்று ப்ளூ சட்டை மாறன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதற்கு பார்த்திபனும் தன் பங்கிற்கு விளக்கமளித்து அறிவுஜீவி என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார். தற்போது ஒரு ஒரு கேள்வி கேட்டும் பயனில்லை. நான் கேட்டும் 14 கேள்விகளுக்கு ஒன்றுக்காவது தகுந்தை விளக்கம் கூறுங்கள் என்று ’பார்த்திபனுக்கான கேள்வி மலர்’ ஒரு பதிவினை போட்டுள்ளார்.
இதற்கு பார்த்திபன் பதில் கூறுவாரா இல்லையா என்பதை தாண்டி ரசிகர்கள் பலர் கண்டபடி தீட்டி ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
இரவின் நிழல், ஒத்த செருப்பு படங்கள் பற்றிய சர்ச்சைக்கான அனைத்து கேள்விகளையும் தொகுத்து...
— Blue Sattai Maran (@tamiltalkies) July 21, 2022
'பார்த்திபனுக்கான கேள்வி மலர்' எனும் தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.
Question bank to Parthiban sir.#parthiban #Iravinnizhal #Oththaseruppusize7 #oththaseruppu #agadam #karmamovie pic.twitter.com/w1ct0kXdQk