ஒரு உப்மா படம்-பா!! OppenHeimer படத்தையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்..
உலக அளவில் மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்து வரும் கிறிஸ்டோபர் நோலன் டெனெட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலியன் மர்ஃபி-ஐ வைத்து Oppenheimer என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.
படம் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகளுடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். எப்போது தமிழ் படங்களை உப்மா படம் என்று கூறி விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் Oppenheimer படத்திற்கு விமர்சனம் செய்திருக்கிறார்.
அணுகுண்டை கண்டுபிடிச்சவர் எந்தெந்த கஷ்டங்களை பார்த்தார் என்று சொல்லும் படமாக இருந்தது. சீரியலில் அவர் செத்துட்டார் என்று சிம்பிளாக சொல்லுவாங்க, அதுபோல தான் படமும். பேசுராங்க பேசுராங்க பேசிட்டே இருக்காங்க, அழுத்தமாக எமோஷ்னலாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது வெறும் அமெரிக்கர்களின் படம். தனிச்சிறப்பா எதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்குன்னா, கதைக்குள்ளே போகாமல் உப்மா கதைய எடுத்துட்டு இருக்காங்க என்று விமர்சித்துள்ளார். Oppenheimer படத்தையும் விட்டு வைக்கலையா என்று நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து வருகிறார்கள்.