சிறுத்தை கூடவே பண்ணுவோமா? சூர்யா, அஜித்தை படுகேவலமாக பேசி வரும் ப்ளூ சட்டை மாறன்..
சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சிக்க பல யூடியூப் சேனல்களை சேர்ந்தவர்கள் விமர்சித்து பேசுவது அதிகரித்து விட்டது. அதிலும் படத்தினை பற்றி கூறாமல் படத்தில் நடித்த கலைஞர்களின் உடலை கேலி செய்து விமர்சித்து வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
அதில் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன். பல படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் வலிமை படம் வெளியான போது அஜித்தை பற்றி கேவளமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். உடலை வைத்து கிண்டல் செய்து வந்த ப்ளூ சட்டை தற்போது அஜித், சூர்யா ரசிகர்களை டார்க்கெட் செய்து விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 7, 2022
அப்படி அஜித் யாருடம் ஏகே63 படத்தில் நடிப்பார் என்ற டிவிட்டையும், சூர்யா ரசிகர் ஒருவர், துப்பாக்கி-க்கு அப்புறம் ஒரு ஹிட் கூட இல்லை என்று விஜய்யை விமர்சிக்க, அதற்கு ப்ளூ சட்டை கத்தி, பிகில், மாஸ்டர் வ்நதப்ப, நீ வண்டலூர் ஜூவுல எலிக்கு வால் ஆட்டிட்டு இருந்தியா என்று கூறியுள்ளார்.
மேலும் சிங்கம் தான் 2009க்கு பின் கடைசி தியேட்டர் சூப்பர் ஹிட். 13 வருசமா அங்க நிலைமை இப்படி இருக்கு நீ பேசற? என்று கூறியுள்ளது அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கத்தி, பிகில், மாஸ்டர் வந்தப்ப.. நீ வண்டலூர் ஜூவுல எலிக்கு வால் ஆட்டிட்டு இருந்தியா?
— Blue Sattai Maran (@tamiltalkies) July 8, 2022
சிங்கம் 2009 ரிலீஸ். அதுதான் கடைசி தியேட்டர் சூப்பர் ஹிட். 13 வருசமா அங்க நிலைமை இப்படி இருக்கு. நீ பேசற? pic.twitter.com/FkIPHp2WTC