தானே கையசைத்த அஜித்.. அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Ajith Kumar Actors
By Edward Jul 27, 2022 08:15 PM GMT
Report

படத்தில் நடித்த கலைஞர்களின் உடலை கேலி செய்து விமர்சித்து வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன். பல படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் வலிமை படம் வெளியான போது அஜித்தை பற்றி கேவளமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உடலை வைத்து கிண்டல் செய்து வந்த ப்ளூ சட்டை தற்போது அஜித், சூர்யா ரசிகர்களை டார்க்கெட் செய்து விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தினை விமர்சித்து பேசியும் கண்டபடி திட்டி பேசியும் வீடியோ மற்றும் சமுக கருத்தினை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதனை பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் அஜித், திருச்சியில் நடக்கும் 47வது மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியொல் பங்கேற்றுள்ளார்.

அப்போது தன்னை பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்தும் கட்டிடத்தின் மேல் நின்று கையசைத்தும் இருக்கிறார். இதனை ப்ளூ சட்டை மாறன், ’தானே கையசைத்த அஜித். ரசிகர்கள் உற்சாகம்’ என்ற பதிவினை போட்டுள்ளார். இதனை தமிழ் ரசிகர்கள் கண்டபடி ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.