விஜய்யின் கடைசி படம் பார்த்து கதறிய அமைச்சர்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்..

Vijay JanaNayagan Ministry of Labour
By Jai Jul 23, 2026 06:30 AM GMT
Report

ஜனநாயகன்

நடிகர் விஜய்யின் கடைசி படமாக இன்று ஜூலை 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பல நடித்துள்ள படம் பல போராட்டங்களுக்கு பின் ரீலீஸாகியிருக்கிறது.

விஜய்யின் கடைசி படம் பார்த்து கதறிய அமைச்சர்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Trolls Minister Mohammed Parvez

படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் பலரும் பாசிட்டிவ் விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய்யின் கடைசி படம் என்பதால் பலரும் கண்ணீர் விட்டு அழவும் செய்கிறார்கள். அந்தவகையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று புதுக்கோட்டையில் ஜனநாயகன் படத்தை தொண்டர்களுடன் திரையரங்கில் பார்த்தார்.

விஜய்யின் கடைசி படம் பார்த்து கதறிய அமைச்சர்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maran Trolls Minister Mohammed Parvez

அப்போது இனிமேல் விஜய்யை தியேட்டரில் பார்த்து ரசிக்க முடியாதே என்ற ஏக்கத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தியை பகிர்ந்த பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், எல்லா பக்கமும் கேமரா. போதாததுக்கு ஃப்ளாஷ் லைட் வேற. தவெக அமைச்சர் ஃபர்வேஸ்...ஜனநாயகன் பார்த்து அழுகிறார்.