பிரபல தியேட்டரை படுகேவலமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. இதுக்கு LED Tv-லயே பாக்கலாம்..
சோசியல் மீடியாக்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு ஒரு சினிமா படத்தின் விமர்சனம் கூறுபவர்கள் யூடியூப்பில் அதிகமாக தோன்றியுள்ளனர். அப்படி எந்த படம் வெளியாகினாலும் படத்தின் ஷோ முடிந்த அதுவும் பாதி படத்திலேயே படம் எப்படி என்று கூறிவிடுகிறார்கள்.
அந்த அளவிற்கு தியேட்டரில் இருந்தே விமர்சனங்கள் மக்கள் மத்தியில் சுலபமாக சென்றுவிடுவதால் பாதி கூட்டம் நல்லா இருக்கோ இல்லையோ விமர்சனத்தை சமுகவலைத்தளத்தில் பார்த்து போகலாம வேண்டாமா என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.
அப்படி தன் யூடியூப் சேனல் மூலம் படுமோசமான வார்த்தையில் விமர்சனம் என்ற பெயரில் கலைஞர்களின் தனிப்பட்ட மற்றும் உடல் ரீதியாக தாக்கி விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
சமீபத்தில் கூட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக இயக்குனர் கெளதம் மேனன் வெச்சு செய்யனும் என்று கூறியது ப்ளூ சட்டை மாறனை வம்புக்கு இழுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி ப்ளூ சட்டை மாறனும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு என்று கூறப்படும் ரோஹினி தியேட்டர் மிகவும் சிறியதாக பார்க்கையில் LED Tv போல் இருக்கிறது. இதனை படுகேவலமான நெட்டிசன்கள் விமர்சித்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் புகைப்படத்தோடு விமர்சித்துள்ளார்.
தற்போது இதேபோல் இருக்கும் தமிழக தியேட்டர்களின் நிலைமையையும் நெட்டிசன்கள் அதில் பகிர்ந்து வருகிறார்கள்.
Buzz of the week:
— Blue Sattai Maran (@tamiltalkies) September 26, 2022
One of the screens in Rohini Theatre complex, Koyambedu, Chennai.
'is it a movie screen or LED TV?' netizens ask. pic.twitter.com/LhXKPJCzAS