மேடையில் பெண்ணின் வாயை பொத்திய தவெக வேட்பாளர்!! விமர்சித்த ப்ளூசட்டையை வெளுத்த ரசிகர்கள்..
தவெக வேட்பாளர்
சினிமாவில் இருந்து விலகி தற்போது முழு அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.
2026ன் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 நாட்களுக்கு பின் நடக்கவுள்ள நிலையில், தவெக சார்பில் விஜய் பல இடங்களுக்கு சென்று தன்னுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

இந்நிலையில், தவெகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா பி எஸ் அசோக் குமார் தன்னுடைய தகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய ஒரு பெண்ணின் வாயை பொத்தியபடி போதும்போதும் என்று கூறி கீழே இறக்கிவிட்டார்.
ப்ளூசட்டை
இந்த விஷயம் சர்ச்சையான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விமர்சித்திருக்கிறார். இதனை பார்த்த தவெகவினர், ப்ளூ சட்டை மாறன் கருத்திற்கு, பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தவெக வேட்பாளர், அப்படி நடந்துக் கொண்டதற்கு முன், இது என் அண்ணன் பொண்ணு, என்று கூறி அறிமுகப்படுத்தி பேசியிருக்கிறார். அதை சிலர் எடிட் செய்து போட்டதை நீங்கள் பகிர்ந்து விமர்சிக்கிறீர்களே, முழுசா பார்த்துவிட்டு எதையும் விமர்சியுங்கள் என்று தங்களின் கருத்துக்களை தவெகவினர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Neenga oru aal than nadantha tha nadantha padi poduringa... Avunga avar annan ponnu sir 🙏🙏🙏 pic.twitter.com/us2mymmUnL
— Somesh singai (@SingaiSome59497) April 19, 2026