நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கிய விவகாரம்!! தனுஷின் பதிலடி..
கர படம்
நடிகர் தனுஷ் நடிப்பி,ல் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கர படம் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் நடந்தது. படத்தை பார்த்த நடிகர் தனுஷ், சிறப்பாக இருப்பதாக கூறி தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆடியோ லான்சில் பேசிய தனுஷ், என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை, ஆனால் நல்ல இயக்குநர்கள் என்னை தேடி வந்தார்கள். கர படத்தின் டைட்டில் குறித்து விமர்சித்தார்கள்.
வேலையில்லா பட்டதாரி, திருச்சிற்றம்பலம் படங்களுக்கு இதே மாதிரி விமர்சனம் வந்தது. ஆனால் அப்படங்கள் ஹிட்டாச்சு என்று பேசினார். இதற்குமுன் ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா? என்று பேசியது வைரலானது குறித்து பதிலளித்துள்ளார்.
தனுஷின் பதிலடி
ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்ம கையில் தான் இருக்கிறது. ஒருநாள் விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் போகும்போது, அப்பேருந்து ஓட்டுனர் ஒருவர் செஃபி கேட்டார். சரி என்று சொல்லி எடுக்கும்போது அந்த நபர் சொன்னது அதிர்ச்சியை தந்தது.

அந்த நபர் என்னிடம், நான் இதுவரைக்கும் யாரிடமும் செல்ஃபி கேட்டதே இல்லை. ஆனால் போயஸ் கார்டன் வீடு பற்றி பேசியது என் மகனுக்கு இன்ஸ்பிரேஷன் ஆனது.
அவன் இப்போ ரொம்ப கஷ்டமா உழைக்கிறான் என்று கூறினார். நான் பேசியதை மோட்டிவேஷனாக எடுத்துக்கிட்டா மோட்டிவேஷன், எண்டர்டெயின்மெண்ட் ஆக எடுத்துக்கிட்டா எண்டர்டெயின்மெயிண்ட். நம்ம வேலை மக்களை மகிழ்விப்பது தான், அதனால் மீமாக போட்டாலும் பரவாயில்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.